அகிம்சை என்ற சொல்லை உச்சரிப்பதற்கே இந்தியாவிற்கு அருகதை இல்லை: லவக்குமார் சுட்டிக்காட்டு
அகிம்சை என்ற சொல்லை உச்சரிப்பதற்கே இந்தியாவிற்கு எவ்வித அருகதையும் இல்லை என மட்டக்;களப்பு மாவட்ட சிவில் செயற்பாட்டாளர் கு.வி.லவக்குமார் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் 19 ஆம் திகதி இடம்பெறவுள்ள தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பிலான முன்னேற்பாடுகள் தொடர்பில் ஆராயும் முகமாக அன்னை பூபதியின் நினைவிடத்திற்குச் சென்றிருந்தவேளை அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதன் போது அன்னை பூபதியின் நினைவுத்தூபியில் மலர்வைத்து சுடரேற்றி அஞ்சலியும் செலுத்தினார்.
அன்னை பூபதி
அப்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “அமைதிப்படை என்ற போர்வையில் இந்தியா தன் இராணுவத்தினை ஈழத்தமிழர்களுக்கு எதிராக ஏவிவிட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயர்நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்விற்கு அனைத்து தமிழ் மக்களும் உணர்வு எழுச்சியுடன் பங்கேற்க வேண்டும்.
மகாத்மா காந்தி அகிம்சை மூலம் இந்தியாவிற்குச் சுதந்திரம் பெற்றுக் கொடுத்தார் என்று சொல்லும் இந்தியா ஓர் அன்னையின் ஜனநாயக வழி அகிம்சைப் போராட்டத்தைக் காலால் மிதித்துள்ளது.
அகிம்சை மூலம் சுதந்திரம் பெற்றதாகப் பெருமை கொள்ளும் இந்தியா ஓர் ஈழத்தாயின் அகிம்சை ரீதியான உண்ணாவிரதப் போராட்டத்தினைக் கண்டு கொள்ளாமல் அவரின் உயிரை காவு கொண்டது.
இந்தியாவிற்கு அருகதை இல்லை
அகிம்சை என்ற சொல்லை உச்சரிப்பதற்கே இந்தியாவிற்கு எவ்வித அருகதையும் இல்லை.
அமைதிப்படை என்ற போர்வையில் இந்தியா தன் இராணுவத்தினை ஈழத்தமிழர்களுக்கு எதிராக ஏவிவிட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்த ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயர்நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்விற்கு அனைத்து தமிழ் மக்களும் உணர்வெழுச்சியுடன் பங்கேற்க வேண்டும்.
அத்துடன் நினைவேந்தல் நிகழ்வுக்காக அன்னையின் நினைவிடத்தில் முன்னெடுக்கப்படுகின்ற சிரமதான நிகழ்வுகளிலும் அனைவரும் பங்கேற்று ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |