கனடா தேர்தலில் இந்தியா தலையிடவில்லை! பகிரங்கமானது உண்மை
கனடாவில் நிகழ்ந்த தேர்தலில் வெளிநாடுகளின் தலையீடு குறித்து எழுந்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையில் இந்தியாவிற்கு தொடர்பில்லை என்பது நிரூபணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இந்தியா மீது கனடா குற்றம் சாட்டியது, இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.
தவிரவும், கனடாவில் இடம்பெற்ற 2021-ம் ஆண்டிற்கான தேர்தலின்போது காலிஸ்தான் இயக்கம், பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாடுகளுக்கு அனுதாபம் கொண்ட, இந்திய வம்சாவளி வாக்காளர்கள் அதிகம் இருக்கும் மாவட்டங்களை இந்திய அரசு குறிவைத்திருந்தது.
இந்தியாவின் தலையீடு
இதனால் தேர்தலில் இந்தியாவின் தலையீடு உள்ளது என இந்தியா மீது குற்றம்சாட்டப்பட்டது, ஆனால் இந்தக் குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்திருந்தது.
இதற்கிடையே, தேர்தலில் வெளிநாடுகளின் தலையீடு குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க கனடா பிரதமர் ட்ரூடோ ஒரு குழுவை அமைத்தார்.
இந்நிலையில், தேர்தல் ஆணைய அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களிடம் அந்தக் குழு விசாரணை நடத்தியது.
இந்தியா முயற்சி
அதிகாரிகள் குழுவிடம் வாக்கெடுப்புகளில் செல்வாக்கு செலுத்த இந்தியா முயற்சித்தது தொடர்பாக எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.
எனவே, 2021 தேர்தலின்போது இந்திய அரசு தனது செல்வாக்கை பிரசாரத்தில் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறும் தகவலை நம்பவில்லை என விசாரணைக் குழுவிடம் தேர்தல் அதிகாரி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |