இந்திய நாடாளுமன்ற தேர்தல்: தீவிர பிரச்சார நடவடிக்கையில் மு.க.ஸ்டாலின்
இந்தியாவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று சிதம்பரத்தில் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளார்.
இதன்படி, இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் உரையாற்றவுள்ளார்.
இந்தியாவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
சிதம்பரத்தில் பிரச்சாரம்
இதற்கமைய, தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்து வருகிறார்.
கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் நேற்று பிரச்சாரத்தை மேற்கொண்ட அவர் இன்று சிதம்பரத்தில் பொது கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.
இதன்படி, இன்று மாலை 6 மணிக்கு மேல் சிதம்பரம் அருகே லால்புரத்தில், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவன், மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வக்கீல் சுதா ஆகியோரை ஆதரித்து நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து உரையாற்றவுள்ளார்.
சூரிய கிரகணத்தில் ஏற்படப்போகும் அதிசயம் :71 வருடங்களுக்கு பின்னர் இலங்கையருக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு
காவல்துறை பாதுகாப்பு
இதனை தொடர்ந்து, கடலூர் வழியாக அவர் இன்றிரவு புதுச்சேரியை சென்றடையவுள்ளார்.
அத்துடன், நாளை புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்யவுள்ளார்.
இதேவேளை, தமிழக முதலமைச்சரின் பிரச்சார நடவடிக்கையை முன்னிட்டு அவர் பயணம் மேற்கொள்ளும் பகுதிகளில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |