சூரிய கிரகணத்தில் ஏற்படப்போகும் அதிசயம் :71 வருடங்களுக்கு பின்னர் இலங்கையருக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு
"டெவில்ஸ் வால்மீன்" அல்லது 12P/Ponce-Brooks என அழைக்கப்படும் வால் நட்சத்திரத்தை 71 ஆண்டுகளுக்குப் பிறகு பார்க்கும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு ஏப்ரல் 8ஆம் திகதி கிடைக்கும் என்று வானியலாளர்கள் கூறுகின்றனர்.
71 ஆண்டுகளுக்கு ஒருமுறை காணக்கூடிய 12P/Pons-Brooks எனப்படும் இந்த வால் நட்சத்திரம் 1300களில் சீன வானியலாளர்களால் முதன்முதலில் கவனிக்கப்பட்டது. இருப்பினும், 19 ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு வானியலாளர் ஜீன் லூயிஸ் மற்றும் 1883 இல் பிரிட்டிஷ்-அமெரிக்க வானியலாளர் வில்லியம்ரொபேட் ப்ரூக்ஸ் ஆகியோரால் இது உத்தியோகபூர்வ அங்கீகாரத்தைப் பெற்றது.
"டெவில்ஸ் வால்மீன்"
அதன்படி வால் நட்சத்திரத்திற்கு போன்ஸ்-புரூக்ஸ் என்று பெயரிடப்பட்டது. இது பொதுவாக "டெவில்ஸ் வால்மீன்" என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் அது அவ்வப்போது பனி மற்றும் வாயு வெடிப்புகள், வால்மீனுக்கு பிசாசு கொம்புகளின் தோற்றத்தை அளிக்கிறது.
18.6 மைல் அகலம் கொண்ட "டெவில்ஸ் வால்மீன்" ஏப்ரல் 21 அன்று சூரியனுக்கு மிக அருகில் வரும். அதாவது அடுத்த வாரத்தில் இருந்து அது சரியான சூழ்நிலையில் வெறும் கண்களுக்கு தெரியும்.
டெவில்ஸ் வால் நட்சத்திரம் ஏப்ரல் 10-ம் திகதி சந்திரனுக்கு அடியில் கடந்து செல்லும் என்றும், அதைப் பார்ப்பதற்கு இது சிறந்த நாளாக அமையும் என்றும் நாசா கூறுகிறது.
சிறப்பு விருந்தினரான 'டெவில்ஸ் வால் நட்சத்திரம்'
"டெவில்ஸ் வால்மீன்" ஏப்ரல் 8 ஆம் திகதி வியாழனுக்கு அருகில் வந்து பிரகாசமாக இருக்கும். மேலும், ஏப்ரல் 8-ம் திகதி முழு சூரிய கிரகணத்தின் போது, வானம் கறுப்பாக மாறும் போது, பல நட்சத்திரங்கள், ஆறு கிரகங்கள் மற்றும் இந்த சிறப்பு விருந்தினரான 'டெவில்ஸ் வால் நட்சத்திரம்' தெரியும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |