பாடசாலை மாணவிகளுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்
Ministry of Education
Sri Lanka
Sri Lankan Schools
School Children
By Raghav
இந்த ஆண்டு, பாடசாலை மாணவிகளுக்கான பாதுகாப்பு அணையாடை வழங்கும் திட்டம், தெரிவு செய்யப்பட்ட வர்த்தக நிறுவனங்களினூடாக மாத்திரமே முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை கல்வி அமைச்சு (Sri Lankan Ministry of Education) அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சு
அதன்படி, இலங்கை தர நிர்ணய நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட SLS தரச் சான்றிதழைப் பெற்ற, 4 வர்த்தக நிறுவனங்களிலிருந்து மட்டுமே இதனைப் பெறமுடியும் என அமைச்சு அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பாடசாலைகளுக்குச் சென்று மாணவிகளுக்குப் பாதுகாப்பு அணையாடைகளை வழங்குமென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
