அவுஸ்திரேலியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து : பயணிகள் அவதி
Australia
Flight
Weather
By Sumithiran
a year ago

Sumithiran
in ஆஸ்திரேலியா
Report
Report this article
அவுஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் 100 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் விமான பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
மோசமான வானிலை காரணமாக
மேலும் மோசமான வானிலை காரணமாக சிட்னி விமான நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டன.
அதேபோல் ரெட்பெர்ன் தொடருந்து நிலையத்தில் பல்வேறு உபகரணங்கள் சேதமடைந்தன.
பயணிகள் பெரும் அவதி
எனவே அங்கு தொடருந்து சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால் தொடருந்து மற்றும் விமான பயணிகள் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமல் பெரும் அவதியடைந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
