விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்
Gotabaya Rajapaksa
Narendra Modi
Sri Lanka Food Crisis
By Vanan
சிறு போகத்திற்கான உர விநியோகம்
சிறு போகத்திற்கான உரங்களை விரைவில் வழங்குவதற்கு இந்தியப் பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளதாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதற்கான உறுதிமொழியினை இந்தியப் பிரதமர் வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நீர்ப்பாசனத் துறை எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் தீர்வுகள் தொடர்பில் நேற்று (01) பிற்பகல் கோட்டை அரச தலைவர் மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அரச தலைவர் இதனைத் தெரிவித்தார்.
இன்னும் 20 நாட்களுக்குள் உர விநியோகம்
இந்த உரமானது இந்திய கடனுதவியுடன் வழங்கப்படுவதுடன், இலங்கைக்கு கிடைத்தவுடன் 20 நாட்களுக்குள் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
உமா ஓயா மற்றும் மொரகஹகந்த திட்டங்களை இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்து பெரும் போகத்திற்கான நன்மைகளை வழங்க முடியும் என அரவ தலைவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி