தாயின் உடலை சுமந்து சென்று தகனம் செய்த மோடி!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென், தமது 100 ஆவது வயதில் காலமானார்.
இன்று அதிகாலை 3.30க்கு அவர் காலமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மேத்தா இதய சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அவர் கடந்த 28 ஆம் திகதி அனுமதிக்கப்பட்டிருந்தார்.
துயரில் மோடி
இந்த நிலையில் தமது தாயார் காலமானதாக பிரதமர் மோடி தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தாயின் மரணத்தை அடுத்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், "ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியை சேர்ந்துள்ளது. என் தாயிடம், ஒரு துறவியின் பயணத்தையும், தன்னலமற்ற கர்மயோகியின் அடையாளத்தையும், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையையும் உணர்ந்துள்ளேன்.
मैं जब उनसे 100वें जन्मदिन पर मिला तो उन्होंने एक बात कही थी, जो हमेशा याद रहती है कि કામ કરો બુદ્ધિથી, જીવન જીવો શુદ્ધિથી यानि काम करो बुद्धि से और जीवन जियो शुद्धि से।
— Narendra Modi (@narendramodi) December 30, 2022
100வது பிறந்தநாளில் நான் அவரைச் சந்தித்தபோது, அவர் ஒரு விஷயத்தைச் சொன்னார். புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழ்க. அதாவது, புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழ்க்கையை வாழுங்கள் என்பதே. இது எப்போதும் நினைவில் இருக்கிறது" என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இறுதி அஞ்சலி
இதையடுத்து குஜராத் மாநிலத்தின் காந்தி நகருக்கு மோடி புறப்பட்டு சென்று தாயாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஹீராபென் உடலை சுமந்தபடி சென்று தகனம் செய்துள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த குஜராத் தேர்தலில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
