ராஜீவ் காந்தியை கொலை செய்த பயங்கரவாத அமைப்பை இலங்கை அழித்தது - அலிசப்ரி டுவீட்..!
32 வருடங்களிற்கு முன்னர் இந்தியாவின் முன்னாள் பிரதமரை கொலை செய்த பயங்கரவாத அமைப்பை 14 வருடங்களிற்கு முன்னர் இலங்கை அழித்தது என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட தினத்தை குறிக்கும் விதத்தில் டுவிட்டரில் அலிசப்ரி இந்த கருத்தினை பதிவு செய்துள்ளார்.
32 வருடங்களிற்கு முன்னர் விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் அவர்களின் நிதி திரட்டும் சர்வதேச வலையமைப்பினர் அரசியல் ஆதரவாளர்கள் புலனாய்வாளர்கள் இணைந்து உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் முன்னாள் பிரதமரை கொலை செய்தனர் என அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
32 years ago , LTTE terrorists and their international network of fundraisers , political supporters and intelligence network combined to assasinate the former PM of world largest democracy.
— M U M Ali Sabry (@alisabrypc) May 21, 2023
??eliminated the most barbaric terrorist org. 14 years ago, bringing peace to the nation. pic.twitter.com/lXp5k1RS0E
இலங்கை காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத இயக்கத்தை 14 வருடங்களிற்கு அழித்தது, இலங்கையில் அமைதி சமதானத்தை ஏற்படுத்தியது என அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
