இந்திய றோவுக்கு புதிய தலை..!
Sri Lanka
India
By pavan
எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் றோவின் (RAW - Research and Analysis Wing) புதிய தலைவராக ரவி சிங்காவை மத்திய அரசாங்கம் நியமித்துள்ளது.
இந்தியாவின் முதன்மை அமைப்புகளின் ஒன்றான றோ (RAW) உளவு மற்றும் கொள்கை வகுப்பு அவற்றை மையப்படுத்திய விடயங்களை கையாளும் முன்னிலை அமைப்பாகும்.
இது இலங்கை உட்பட்ட இந்தியாவின் அயல்நாடுகளில் எடுக்க வேண்டிய கொள்கை வகுப்பு சார்ந்த விடயங்களை மத்திய அரசுக்கு வழங்கும் கட்டமைப்பாகும்.
றோவின் தற்போதைய தலைவரான சமந்குமார் லோயல் கடந்த வருடம் நவம்பர் மாதம் இரகசியமாக கொழும்புக்கு சென்று அங்கு இரகசிய பேச்சுக்களை நடத்தியிருந்தார்.
இது பற்றிய விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான செய்தி வீச்சு
