அநுர மீது மிகப்பெரிய அழுத்தத்தை கொடுக்க தயாராகும் இந்தியா
இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயகவுக்கு மிகப்பெரிய அழுத்தத்தை கொடுப்பதற்கு இந்தியா தயாராகி வருவதாக பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
இலங்கை பொருளாதார ரீதியில் வளர்ச்சியடையவும் வீழ்ச்சியடையவும் விரும்பாத இந்தியாவின் எண்ணத்தை தோற்கடிக்க வேண்டுமாயின் இந்தியாவை வெளியேற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை ஜனாதிபதி அநுர எட்டியுள்ளதாக ஆய்வாளர் குறிப்பிட்டார்.
அத்துடன், பெரும்பான்மை மக்கள் தங்களுக்கு ஒரு மாற்றம் தேவை என கருதியே தற்போது அநுரகுமார திஸாநாயகவை வெற்றியடைய செய்ததாக ஆய்வாளர் அரூஸ் கூறினார்.
இதேவேளை, பூகோள அரசியலில் இருந்து அவர் தப்பி பிழைப்பதே அநுரவின் அடுத்த சவால் என ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், அநுரவின் ஆட்சியால் நிகழும் மற்றும் நிகழவுள்ள மாற்றங்கள் தொடர்பில் அலசி ஆராய்கிறது இன்றைய ஊடறுப்பு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |