5 வருட இடைவெளிக்குப் பிறகு சீன மக்கள் தொடர்பில் இந்தியா எடுத்த முடிவு
China
India
Tourist Visa
By Sumithiran
சீன குடிமக்களுக்கான சுற்றுலா விசாக்களை நாளை (24) முதல் இந்தியா மீண்டும் வழங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவிட்-19 பரவல் கட்டுப்படுத்தப்பட்டதாலும், ஜூன் 2020 இல் இமாச்சல பிரதேச மோதல் காரணமாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் பதட்டமடைந்ததாலும், 2020 ஆம் ஆண்டில் சுற்றுலா விசாக்களை நிறுத்தி வைக்க இந்தியா முடிவு செய்திருந்தது.
சீன குடிமக்களுக்கான சுற்றுலா விசா
அதன்படி, 5 வருட இடைவெளிக்குப் பிறகு நாளை முதல் சீன குடிமக்களுக்கான சுற்றுலா விசாக்களை வழங்குவதை இந்தியா மீண்டும் தொடங்க உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவில் உள்ள இந்திய தூதரகம் ஒரு அறிக்கையில், சீன குடிமக்கள் ஒன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதன் மூலம் விசாக்களைப் பெற முடியும் என்று தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்