அதிரப்போகும் உலக சந்தை: அமெரிக்காவுக்கு தயங்காமல் பதிலடி கொடுத்த இந்தியா!
அமெரிக்கா, இரும்பு மற்றும் அலுமினியம் மீதான இறக்குமதி வரியை 25% இருந்து 50% ஆக உயர்த்தியதற்கு பதிலடியாக, இந்தியா அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க முடிவு செய்துள்ளது.
இந்த முடிவு, இரண்டு நாடுகளுக்கும் இடையே நடைபெற்றுவரும் “மினி வர்த்தக ஒப்பந்த” பேச்சுவார்த்தைகளின் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது.
விரைவில் ஒப்பந்தம்
இந்த ஒப்பந்தம் விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், முழுமையான வர்த்தக ஒப்பந்தம், செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதங்களில் கையெழுத்தாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இந்தியாவின் பதிலடி நடவடிக்கையால், சுமார் ₹65,000 கோடி மதிப்பிலான அமெரிக்க பொருட்கள் பாதிக்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
உலக வர்த்தகத்தில் மாற்றம்
இதேவேளை, இந்தியா, உலக வர்த்தக அமைப்பிடம் (WTO) குறித்த தீர்மானத்தை அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னிணியில், இந்தியாவின் இந்த முடிவானது, உலக வர்த்தகத்தில் மாற்றத்தை உருவாக்கும் என் சர்வதேச நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
