ரணிலை ஜனாதிபதியாக்கும் நகர்வில் மேற்குலகங்கள் !
இந்தியா (India) உட்பட மேற்குலக அரசியல் நிலைமைகள் அனைத்தும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickramasinghe) ஆதரிக்கும் நிலைப்பாட்டுடனேயே செயற்படுவதாக சமூக விஞ்ஞான ஆய்வாளரும் சட்டத்தரணியுமான ஜோதிலிங்கம் (Jyothilingam) பகிரங்கப்படுத்தியுள்ளார்.
குறித்த விடயத்தை ஐபிசி தமிழ் தொலைக்காட்சியின், சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நம் நாட்டில் இந்திய அரசியல் தலையீட்டை நம்புவது மற்றும் நம்பாததற்கு அப்பாற்பட்டு, அவர்கள் தலையீடில்லாமல் இலங்கையில் ஒரு செயலை முன்னெடுப்பது கடினம்.
அரசியல் நிலைமை
அத்தோடு, புவிசாரா அரசியல் நிலைமை காரணமாக இந்தியாவை முழுமையாக பகைத்துகொண்டு செயற்பட முற்படுவது தமிழ் தரப்பிற்கு மிகவும் கடினம்.
மேலும், தமிழ் பொது வேட்பாளர் மீதான அழுத்தமானது இந்திய தரப்பினரிடம் இருந்து எழுவதை விட தென்னிலங்கை அரசியல்வாதிகள் இடமிருந்தே அதிகம் எழுகின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இலங்கை அரசியலில் இந்தியாவின் நகர்வுகளையும் மற்றும் தமிழ் பொது வேட்பாளர் மீதான எதிர்பார்ப்புக்களையும் விளக்கி கூறுகின்றது இன்றைய சக்கரவியூகம் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |