சர்வதேசத்தின் ஆடுகளமாக மாறியுள்ள இலங்கைக்குள் இந்தியாவின் ஊடுருவல்
அநுர குமாரவின் (Anura Kumara Dissanayake) வெற்றி இந்தியாவிற்கு ஒரு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என பிரித்தானிய ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், இலங்கையை தனது கைக்குள் கொண்டு வர வேண்டும் என்பது இந்தியாவின் நோக்கம்.
எனவேதான் அண்மையில் ஜெயசங்கர் (S. Jaishankar) இலங்கை விஜயத்தின் போது தமிழ்தரப்புக்களை கூட பார்க்காமல் சிங்கள தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுப்பட்டார்.
இந்நிலையில் சீனாவின் (China) கப்பல் வரபோகின்ற நிலையில் இந்தியா கடந்த ஞாயிற்றுகிழமை கடற்படை கப்பலொன்றை களமிறக்கியது.
தன்னை நிலைநிறுத்த வேண்டுமென்ற தர்மசங்கடமான நிலையில் இந்தியா (India) உள்ளது.
இலங்கைக்குள் இந்தியாவின் ஊடுருவலை சிங்கள மக்கள் தொடர்ச்சியாக எதிர்க்கின்றனர்.
இது தொடர்பான பல விடயங்களை அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |