தேங்காய் விலை அதிகரிப்பு: அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்
தேங்காய் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் சுற்றுச்சூழல், வனவிலங்கு மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சசு நடமாடும் தேங்காய் விற்பனை வேலை திட்டத்தை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் படி, குறித்த திட்டம் நாளை முதல் (ஒக்டோபர் 23) நடைமுறைப்படுத்தப்பட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வேலைத்திட்டத்தின் முதற்கட்டம் கொழும்பு, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மற்றும் கடுவெல ஆகிய இடங்களில் நடைமுறைப்படுத்தபடவுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேங்காய் விலை
இதேவேளை, தேங்காய் விற்பனை வேலைத்திட்டத்தில் கொழும்பு வெலிக்கடை, கிருலப்பனை மற்றும் நிதி அமைச்சினைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாகனங்கள் ஊடாக தேங்காய் கொள்வனவு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் போது, ரூ.100-120 வரையிலான தரமான தேங்காய்களை வாங்குவதற்கான வாய்ப்பு கொள்வனவாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |