சீனாவுக்காய் களமிறங்கிய இந்தியா..!
இந்தியப் பெருங்கடலில் 39 பணியாளர்களுடன் கவிழ்ந்த சீன மீன்பிடிக் கப்பலை மீட்க இந்திய கடற்படை அதன் கடல் கண்காணிப்பு விமானத்தை அனுப்பியுள்ளது.
பாதகமான வானிலை இருந்தபோதிலும், விரிவான தேடுதல்களை மேற்கொண்ட இந்த விமானம், மூழ்கிய கப்பலுக்குச் சொந்தமான பல பொருட்களைக் கண்டறிந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.
கிழக்கு லடாக்கில் நீடித்து வரும் எல்லை பிரச்சினைக்கு மத்தியிலும் இந்திய கடற்படையின் உதவி இதன்போது சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய கடற்படை
இந்தநிலையில் தற்போது நடைபெற்று வரும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க இந்திய கடற்படை தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் அவுஸ்திரேலியாவும் உதவி செய்துள்ளது. இதேவேளை சீன வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர், பீய்ஜிங்கில் வெளியிட்ட தகவலில், பல நாடுகள் சீனாவுடன் இணைந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளைத் தொடர்வதாகவும் உயிர்களை காப்பாற்றலாம் என்று நம்பிக்கை இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிந்திக்கிடைத்த தகவலின் படி, கப்பலில் பயணித்த இருவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
