மீண்டும் அத்துமீறிய இந்திய மீனவர்கள் - நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
Sri Lanka
India
By pavan
இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்டு கைதான 15 தமிழக மீனவர்களையும் ஜுலை 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் இன்று(09) அதிகாலை அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இராமேஸ்வரத்தைச் சேர்ந்த இரு படகுகளில் வந்த மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
ஜுலை 21ம் திகதி ஒத்திவைப்பு

கைது செய்யப்பட்ட 15 தமிழக மீனவர்களும் அவர்கள் பயணித்த இரு படகுகளும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டு கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டது.
இதன்போது நீதிமன்றம் குறித்த உத்தரவையிட்டதுடன் ஜுலை 21ம் திகதி வரை வழக்கை ஒத்திவைத்தது.