இந்தியாவுக்கே இரண்டாவது இடம்: கனடா வெளியிட்ட சர்ச்சைக்குரிய அறிக்கை
கனடாவால் இந்தியா தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கை பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.
இந்த அறிக்கையில் கனடாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இரண்டாவது நாடு இந்தியாதான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரணம்
இதன்படி, குறித்த அறிக்கை கனடாவின் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், செனேட்டர்கள் அடங்கிய தேசிய பாதுகாப்பு மற்றும் உளவு கமிட்டி (National Security and Intelligence Committee of Parliamentarians - NSICOP) ஆகியோரால் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அறிக்கையில் கனேடிய ஜனநாயகத்தின் முதல் அச்சுறுத்தலாக சீனா விளங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இரண்டாவது இடத்தில் முன்பு ரஷ்யா இருந்ததாகவும் தற்போது அந்த இடத்தில் இந்தியா இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் கருத்து
இந்த நிலையில், கனடாவின் ஜனநாயக நடைமுறைகள் மற்றும் நிறுவனங்களில் தலையிடுதல், கனேடிய அரசியல்வாதிகள், இன அடிப்படையிலான ஊடகங்கள் மற்றும் இந்திய கனேடிய இன கலாச்சார சமுதாயங்களை குறிவைத்தல் ஆகிய விடயங்கள் மூலம் இந்தியா இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.
இதேவேளை, வெளியிடப்பட்ட இந்த அறிக்கை தொடர்பில் இந்திய தரப்பிலிருந்து இதுவரை எந்தவித கருத்துக்களும் வெளிவரவில்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |