நேபாளத்தை உலுக்கிய வெள்ளப்பெருக்கு : நிவாரணப் பொருட்களுடன் விரையும் இந்திய விமானம்
நேபாளம் மற்றும் சீனாவுக்கு உட்பட்ட திபெத் பிராந்தியத்தில் நேற்று (26) ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 900க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்துக்கு இந்திய அரசு நேற்று (26) 10 தொன் நிவாரணப் பொருட்களை விமானம் மூலம் அனுப்பிவைத்த நிலையில் இன்று 37.5 தொன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைத்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,“நேபாளத்துக்காக 37.5 தொன் நிவாரணப் பொருட்கள், மருந்துகள், உணவு பொதிகளை ஏற்றிக்கொண்டு இரண்டாவது விமானம் புறப்பட்டுள்ளது.
ஜெய்சங்கரின் பதிவு
இந்தியா - நேபாள அதிகாரிகளுடன் நெருங்கிய, தொடர்ச்சியான தொடர்பில் உள்ளது. நிவாரணப் பணிகளுக்கு இந்தியா தொடர்ந்து வலுவான ஆதரவை அளிக்கும்” என தெரிவித்துள்ளார்.
A second flight has just taken off, carrying 37.5 tonnes of HADR material, medicines & food packets for Nepal.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) August 27, 2026
India remains in close and continuous touch with the Nepalese authorities. We will continue to strongly support the ongoing relief efforts.
🇮🇳🇳🇵 pic.twitter.com/4m46leqfkC
இதேவேளை முன்னதாக நேற்று அவர் வெளியிட்ட பதிவில், “பேரழிவை ஏற்படுத்தி உள்ள வெள்ளப்பெருக்கால் நேபாளத்துக்கு ஆதரவு அளிக்கும் நோக்கில் 10 தொன் நிவாரணப் பொருட்கள் மற்றும் மருந்துகளை அனுப்பி உள்ளோம்.
உயிரிழந்த குடும்பங்களுடனும் பாதிக்கப்பட்ட அனைவருடனும் எங்கள் வருத்தங்களை பகிர்ந்துகொள்கிறோம். இந்த சவாலை எதிர்கொள்ள இந்தியா நேபாளத்துடனும் அதன் மக்களுடனும் துணை நிற்கிறது” என தெரிவித்திருந்தார்.
மேலும் இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி நேபாளத்தைச் சேர்ந்த 295 பேரும், இந்தியாவைச் சேர்ந்த 133 பேரும், அமெரிக்கா, உக்ரைன், அவுஸ்திரேலியா, பிரித்தானியா, கனடா, மலேசியா போன்ற பல நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் காணாமல் போயுள்ளனர்.
அத்துடன் மீட்புப் பணிகளை மேற்கொள்ள இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையினர் நேபாளத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |