நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு
நேபாளத்தில் நிலவும் அவசர நிலைமையைக் கருத்தில் கொண்டு, அந்நாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் விழிப்புடனும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அதிகம் ஏற்படக்கூடிய அபாயமுள்ள மாவட்டங்களில் அருகாமையில் வசிக்கும் இலங்கையர்கள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறும் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதுவரை அனர்த்ததில் சிக்கி 500க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் காணாமல் போயுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேபாளத்தை புரட்டிப் போட்ட வெள்ளம்: ஈஷா சேர்ந்த 77 பேரைக் காணவில்லை - சத்குரு வெளியிட்ட பயங்கர காணொளி
காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம்
எனவே அந்நாட்டில் அவசர உதவி அல்லது ஒருங்கிணைப்பு தேவைப்படும் இலங்கையர்கள் காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகத்தை 24 மணி நேர ஹாட்லைன் +977 9851048653 அல்லது slemk.kathmandu@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாக தொடர்புகொள்ளலாம்.

எனினும், நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இதுவரை எந்தவொரு இலங்கையரும் பாதிக்கப்பட்டதாக தகவல் கிடைக்கவில்லை என இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
காணாமல் போனவர்களில் இந்தியாவைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோரும், அமெரிக்காவைச் சேர்ந்த 54 பேரும், இங்கிலாந்தைச் சேர்ந்த 33 பேரும் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோரும் அடங்குகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11