உச்சக்கட்ட பதற்றம் : பாகிஸ்தானின் மூன்று போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது இந்தியா
பாகிஸ்தான்(pakistan) விமான படைக்கு சொந்தமான எப் 16 விமானம் மற்றும் 2 ஜேஎப் போர் விமானங்களை இந்திய இராணுவம்(indian army) சுட்டு வீழ்த்தியுள்ளதாகதகவல்கள் வெளியாகி உள்ளன.
பாகிஸ்தான், காஷ்மீரில் ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய இராணுவம் எஸ் 400 வான்பாதுகாப்பு கவசம் மற்றும் ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் அவை சுட்டு வீழ்த்தப்பட்டன.
இன்று மாலை நடந்த சம்பவம்
இந்நிலையில், பாகிஸ்தான் விமானப்படைக்கு சொந்தமான எப் 16 போர் விமானம் உள்ளிட்ட3 போர் விமானங்களை இந்திய வான் பாதுகாப்பு கவச அமைப்பு இன்று மாலை (08)சுட்டு வீழ்த்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் விமானப்படையின் முக்கிய விமானப்படை நிலையமான சர்கோதா விமான தளத்திலிருந்து F-16 புறப்பட்டது. இந்திய (SAM) வான் ஏவுகணை சர்கோதா விமான தளத்திற்கு அருகில் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக இந்திய படை வட்டாரங்கள் தெரிவித்தன.
பாகிஸ்தானின் முன்னணி விமான தளம்
சர்கோதா பாகிஸ்தானின் முன்னணி விமான தளமாகும், மேலும் நாட்டின் மிகவும் பலமாக பாதுகாக்கப்பட்ட ஒன்றாகும், இது நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ளது.
அதேபோல் 2 ஜேஎப் போர் விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
