கச்சதீவை மீட்பதே தமிழக பாஜகவின் இலக்கு..!
Sri Lanka
K. Annamalai
India
By Kanna
கச்சதீவை மீட்பதே தமிழக பாரதீய ஜனதா கட்சியின் இலட்சியம் எனவும் இதனை மீட்க பிரதமர் மோடியிடம் வலியுறுத்துவோம் என்றும் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
இராமேஸ்வரத்தில், 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் விசைப்படகில் பாரதீய ஜனதா கட்சி உறுப்பினர்கள் கடல் பயணம் சென்றனர்.
அதன் பின்னர் ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த அண்ணாமலை, இலங்கைக்கு அருகில் ராமேஸ்வரம் பகுதி உள்ளதால் அந்நாட்டு கடற்படையின் தாக்குதல், சிறைபிடிப்பு சம்பவங்களால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2017-/ 2018 இல் இலங்கை சிறையில் இருந்த மீனவர்கள், படகுகளை பிரதமர் மோடி மீட்டிக்கொடுத்தார். தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள 60 படகுகளை மீட்க பிரதமரிடம் வலியுறுத்துவோம்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்