இந்தியா காலூன்றினால் ஆபத்து - சிறிலங்காவில் வலுக்கும் எதிர்ப்பு
இலங்கையில் இந்தியா காலூன்ற நாடாளுமன்ற பிரதிநிதிகளாக இருக்கும் எவரும் ஆதரவளிக்க கூடாதென சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அது இலங்கையின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நில ரீதியான இணைவு

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் இந்தியப் பயணத்தின் போது, இலங்கையையும் இந்தியாவையும் நில ரீதியாக இணைப்பது தொடர்பான சாத்தியப்பாட்டு ஆய்வுக்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், இந்தியா காலூன்றினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இலங்கையில் இருந்து துண்டாடப்படும் என சரத் வீரசேகர எச்சரித்துள்ளார்.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

இதற்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் இடமளிக்கக் கூடாது எனவும் அது தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முன்னாள் கடற்படைத் தளபதி மற்றும் மக்கள் பிரதிநிதி எனும் வகையில் அவர் இதனை சிறிலங்கா அரசாங்கத்துக்கு தெரிவிப்பதாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.