காங்கேசன்துறை - நாகபட்டினம் கப்பல் சேவை ஜனவரியில் ஆரம்பம்
Sri Lanka
India
By Vanan
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையில் சிவகங்கை பயணிகள் கப்பல் சேவை, ஜனவரி முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட, “ இந்த சிறீ ” கப்பல் சேவைகள் தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சோ.நிரஞ்சன் நந்தகோபன் இதனை தெரிவித்துள்ளார்.
பூர்வாங்க அனுமதிகள்
ஜனவரி முதல் கப்பல் சேவையை நடத்துவதற்கான பூர்வாங்க அனுமதிகள் இரண்டு அரசாங்கங்களிடம் இருந்தும் கிடைத்து விட்டதாகவும் இதற்காக இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 'சிவகங்கை' என்ற கப்பல் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்தார்.
குறித்த கப்பல் டிசம்பர் நடுப்பகுதியில் நாகபட்டினத்திற்கு கொண்டுவரப்படவுள்ளதாகவும் ஜனவரி முதல் வாரத்தில் காலநிலையைப் பொறுத்து ஆரம்பிக்கப்பட இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி