இலங்கை மற்றும் இந்தியா இடையேயான பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்
இலங்கை மற்றும் இந்தியா இடையேயான பயணிகள் கப்பல் சேவை கடந்த ஒக்டோபர் 10 ம் திகதி ஆரம்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் ஒக்டோபர் (12) நேற்று என மாற்றப்பட்டது.
இந்நிலையில், நேற்றும் (12) சேவை ஆரம்பிக்காத நிலையில் தற்போது ஒக்டோபர் (14) நாளை ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சோதனை ஓட்டம்
காங்கேசன்துறை துறைமுகத்துக்கும் நாகப்பட்டினம் துறைமுகத்துக்கும் இடையை சேவையில் ஈடுபடவுள்ள குறித்த கப்பலின் சோதனை ஓட்டம் கடந்த ஒக்டோபர் (08) இடம்பெற்றது.
காலநிலையைக் பொறுத்து குறித்த திகதிகளில் மாற்றம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அமைச்சர்களின் பங்கேற்பில் உள்ள சில சிக்கல் காரணமாக கப்பல் சேவை தாமதமடைவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த 10 ம் திகதி சேவை ஆரம்பிக்கும் என நம்பி கப்பல் சேவையில் பயணிக்க இரண்டு நாட்டிலும் கணிசமானவர்கள் முகவர்கள் ஊடாக பயண சீட்டுக்களை பதிவு செய்த போதும் சேவை ஆரம்பிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் கப்பல் சேவை எப்போது ஆரம்பிக்கும் என எதிர்பார்த்து காத்துள்ளனர்.

கப்பல் போக்குவரத்து சேவை
தற்போது சேவை ஆரம்பிக்கப்பட்டாலும் குறிப்பிட்ட நாட்களில் நிறுத்தப்பட்டு அடுத்த வருடம் ஐனவரி முதல் முழுமையான கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.
கப்பலில்150 பயணிகள் பயணம் செய்யமுடியும் என்பதுடன் இரு வழி பயணக் கட்டணமாக 53,500 ரூபாயும் ஒரு வழி பயணக் கட்டணமாக 27,000 ரூபாயும் அறவிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        