இந்திய சிவில் விமானப் பாதுகாப்பு பணியகத்தின் அதிரடி அறிவிப்பு
இந்திய பாகிஸ்தான் பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்திய அரசாங்கம் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.
இது தொடர்பான நெறிமுறைகளை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் சிவில் விமானப் பாதுகாப்பு பணியகம் (BCAS) அறிவித்துள்ளது.
அதன்படி, விமானத்தில் ஏறுவதற்கு முன் அனைத்து பயணிகளுக்கும் கட்டாய இரண்டாம் நிலை பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
அத்தோடு, செல்லுபடியாகும் பற்றுச்சீட்டுகள் கொண்ட பயணிகள் மாத்திரமே அனுமதிக்கும் வரையறுக்கப்பட்ட முனையம் அணு முடியும் என்பதுடன், அனைத்து விமான நிலையங்களிலும் முழுமையான சிசிரிவி கண்காணிப்பில் காணப்படும்.
இதேவேளை, விமானங்களில் எயார் மார்ஷல்களின் (air marshals) எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விமானப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து வரும் நிலையில், அதிகரித்துள்ளபதற்றமான காலகட்டத்தில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக இந்திய தரப்பு தெரிவித்துள்ளது.
விமான நிறுவனங்களின் கோரிக்கை
இவ்வாறானதொரு பின்னணியில், சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகத்தின் உத்தரவைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதிலும் உள்ள தனது வாடிக்கையாளர்களை புறப்பாடுக்கு முன்னதாக குறைந்தது மூன்று மணி நேரத்திற்கு முன்னதாக அந்தந்த விமான நிலையங்களுக்கு வருமாறு எயார் இந்தியா மற்றும் இண்டிகோ எயார்லைன்ஸ் நிறுவனங்கள் வேண்டுகொள் விடுத்துள்ளன.
#6ETravelUpdate
— IndiGo (@IndiGo6E) May 8, 2025
In these extraordinary times, heightened security measures are taken up across all airports. We request you to allow some extra time for your journey to accommodate security checks and formalities. We appreciate your understanding and cooperation.
அத்துடன், நாடாளவிய ரீதியில் இருபத்தி நான்கு விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
