காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர் - காரணம் என்ன... சிட்னியில் நடந்த சம்பவம்
ஆஸ்திரேலிய தொடருந்து நிலையத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதால் காவல்துறையினர் அவரை சுட்டுக்கொன்றனர்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அப்ரன் பகுதியில் அமைந்துள்ள தொடருந்து நிலையத்திற்கு நேற்று (28) வந்த குறித்த நபர் அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த துய்மைப்பணியாளர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தினார்.
இந்த தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு காவல்துறையினர் விரைந்து சென்றனர்.
தமிழ்நாட்டை சேர்ந்தவர்

அப்போது, அந்த நபர் காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடத்த முற்பட்டார். இதையடுத்து, கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்.
விசாரணையில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் இந்தியாவின் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதும் அவரது பெயர் முகமது ரஹ்மதுல்லா சயது அகமது (வயது 32) என்பதும் தெரியவந்துள்ளது.
தற்காலிக விசாவில் ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்த தமிழ்நாட்டை சேர்ந்த அகமது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதற்கான காரணம் என்ன? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.