இந்தியாவை உலுக்கிய கோர விபத்து - தீவிரமடையும் சீரமைக்கும் பணிகள்
இந்தியாவில் ஏற்பட்ட பாரிய தொடருந்துகள் விபத்தின் சீரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில், மூன்று தொடருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகி, 36 மணிநேரம் கடந்துள்ள நிலையில், குறித்த பகுதியில் சீரமைப்பு பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
தண்டவாளத்தில் தடம்புரண்டிருந்த தொடருந்து பெட்டிகள் அகற்றும் பணிகள் முடிவடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சீரமைக்கும் பணிகள்

இந்த நிலையில், தண்டவாளங்கள் மற்றும் மின் இணைப்புகளை சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விரைவில் சீரமைப்பு பணிகளை முடிவுக்கு கொண்டுவர முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு 3 தொடருந்துகளுக்கு இடையே ஏற்பட்ட விபத்தின் காரணமாக தற்போது வரை 300 ற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.