சூப்பர் ஓவரில் இலங்கையை வென்றது இந்தியா
புதிய இணைப்பு
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவது ரி20 சர்வதேசப் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.
இரு அணிகளும் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 137 ஓட்டங்களை எடுத்தன.
எனினும் சூப்பர் ஓவரில் வெறும் 2 ஓட்டங்கள் மட்டுமே பெற முடிந்தது.
பின்னர் தொடக்க வீரராக களம் இறங்கிய இந்திய அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ், தான் சந்தித்த முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து போட்டியின் வெற்றியை பதிவு செய்தார்.
இரண்டாம் இணைப்பு
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டி சமனில் முடிந்தது.
இதனால் போட்டியின் வெற்றி சூப்பர் ஓவரால் தீர்மானிக்கப்படுகிறது.
இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ஓட்டங்களை எடுத்துள்ளது.
இதன் படி, இப்போட்டியில் இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 138 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணியின் பந்துவீச்சில் மகிஷ் தீக்சன 3 விக்கெட்டுகளையும் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
தனது முதல் ரி20 சர்வதேசப் போட்டியில் இலங்கை அணி சார்பாக இணைந்துகொண்ட சமிது விக்கிரமசிங்க தனது 4 ஓவர்களில் 17 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.
முதலாம் இணைப்பு
இந்திய(India) இலங்கை(Sri lanka) அணிகளுக்கிடையிலான 3வது ரி20 போட்டியில் இன்று(30) நடைபெறுகின்றது.
பல்லகெலேவில் இடம்பெறும் இந்த போட்டியில் இலங்கை அணி நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்று களத்தடுப்பை தீர்மானித்துள்ளது.
நாணயசுழற்சியில் வெற்றி
முதல் மற்றும் 2-வது போட்டியில் இந்தியா வென்று ரி20 தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.
இதேவேளை, இந்திய இலங்கை அணிகளுக்கிடையிலான ஒரு நாள் போட்டித்தொடர், ஒகஸ்ட் 2,4,7 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |