ஹோட்டலில் வேலை செய்தவருக்கு லொட்டரியில் அடித்த அதிஷ்டம் - அவரின் நெகிழ்ச்சியான செயல்
இந்திய நாட்டவர் ஒருவர் துபாயில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வந்த நிலையில் அவருக்கு லொட்டரியில் பணமழை கொட்டியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியருவதாவது,
இந்திய நாட்டை சேர்ந்தவர் சஜேஷ் NS. இவர் துபாயில் உள்ள உணவகம் ஒன்றில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணிபுரிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பாக ஓமானில் பணிபுரிந்து வந்த சஜேஷ், பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிந்து வருகிறார்.
ரூபா 55 கோடியை வென்ற அதிஷ்டசாலி
அப்படி ஒரு சூழலில் கடந்த நான்கு ஆண்டுகளாக லொட்டரி வாங்கும் பழக்கத்தையும் கொண்டுள்ளார் சஜேஷ். இந்த நிலையில், சமீபத்தில் சஜேஷ் வாங்கிய லொட்டரிக்கு 25 மில்லியன் திர்ஹாம் (இந்திய மதிப்பில் ₹ 55 கோடி) பரிசு விழுந்துள்ளது.
தான் பணிபுரியும் உணவகத்தில் சக ஊழியர்கள் 20 பேருடன் சேர்ந்து இந்த லொட்டரி டிக்கெட்டை சஜேஷ் வாங்கி உள்ளார். இதனைத் தொடர்ந்து தங்களுக்கு கிடைத்த பரிசுத் தொகையையும் அவர்கள் சரிசமமாக பகிர்ந்து கொண்டுள்ளனர்.
பலருக்கும் உதவி
இது தொடர்பாக பேசும் சஜேஷ், தனது உணவகத்தில் 150 ஊழியர்கள் வரை பணிபுரிவதாவும், தனக்கு கிடைத்த பணத்தை கொண்டு அதில் பலருக்கும் உதவி செய்யவும் முடிவு எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தற்போது லொட்டரி மூலம் கோடீஸ்வரராக மாறினாலும் தொடர்ந்து லொட்டரி வாங்குவேன் என்றும் இதன் மூலம் தனது வாழ்வும் திசை திரும்பாது என்றும் சஜேஷ் குறிப்பிட்டுள்ளார்.