கட்டுநாயக்காவில் சிக்கிய இந்திய பிரஜை
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து எந்த வரியும் செலுத்தாமல் சுமார் ரூ. 2.5 மில்லியன் மதிப்புள்ள 88 விஸ்கி போத்தல்களை எடுத்துச் சென்ற இந்திய(india) பயணி ஒருவர் நேற்று( 02/02)மதியம் விமான நிலைய குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு 42 வயது, இந்தியாவின்(india) சென்னையில்(chennai) வசிப்பவர். அவர் இந்தியாவின் பெங்களூரிலிருந்து சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-1174 மூலம் நேற்று (02/02)பிற்பகல் 02.00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
விஸ்கி போத்தல்களுடன் வெளியேறிய நபர்
இதனை்போது விமான நிலையத்திலிருந்து விஸ்கி போத்தல்களுடன் வெளியேறிக் கொண்டிருந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.
இலங்கை கடவுச்சீட்டுகளும் கண்டுபிடிப்பு
மேலும் அவரது கைப்பையை சோதனையிட்டபோது, குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்த 19 இலங்கை கடவுச்சீட்டுக்களையும் கண்டுபிடித்தனர்.
இந்திய நாட்டவர் இன்று(02/03) இன்று நீர்கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விஸ்கி போத்தல்கள் மற்றும் இலங்கை கடவுச்சீட்டுக்களுடன் முற்படுத்தப்பட்டார், அங்கு அவர் எதிர்வரும் 02/06 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |