கட்டுநாயக்காவில் வந்திறங்கிய இந்திய தம்பதி குழந்தையுடன் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 20 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள குஷ் போதைப்பொருட்களை கொண்டு வந்த இந்திய தம்பதியினர் குழந்தையுடன் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இன்று (27) கைது செய்யப்பட்டனர்.
சுமார் 30 வயதுடைய இந்திய தம்பதியினர், தங்கள் ஆறு வயது குழந்தையுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.
பாங்கொக்கிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் வருகை
அவர்கள் இன்று (27) காலை 11.00 மணிக்கு தாய்லாந்தின் பாங்கொக்கிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-403 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இரண்டு சூட்கேஸ்களில் மறைத்து சொக்லேட் உறைகளில் சுற்றப்பட்ட இரண்டு கிலோகிராம் போதைப்பொருட்களைக் கொண்டு வந்திருந்தனர்.
ஏற்கனவே நாட்டிற்கு வருகை
இந்த இந்திய பிரஜைகள் ஏற்கனவே நாட்டிற்கு வருகை தந்திருப்பதை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இந்த போதைப்பொருள் கையிருப்பையும் இந்திய பிரஜைகள் குழுவையும் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 5 நாட்கள் முன்
