இந்திய அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சென்ற வாகனம் விபத்து!
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரவீன் குமார் மற்றும் அவரின் மகன் இருவரும் மகிழுந்து விபத்தில் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார். இவர் இந்திய அணிக்காக 68 ஒருநாள் போட்டி, 6 டெஸ்ட் போட்டி, 10 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.
இவர் உத்தரபிரதேச மாநிலம் மீரட் பாக்பத் சாலையில் உள்ள முல்தான் நகரில் வசித்து வருகிறார்.
நேற்று இரவு 10 மணியளவில் தனது மகனுடன் பாண்டவ் நகரில் இருந்து மகிழுந்தில் சென்று கொண்டிருந்த வேளை அவர் பயணித்த மகிழுந்து எதிரே வேகமாக வந்த பாரஊர்தி மீது பயங்கரமாக மோதியது.
பாரஊர்தியின் ஓட்டுநர் கைது

இந்த விபத்தில் சிக்கிய பிரவீன் குமார் மற்றும் அவரது மகன் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேகமாக வந்து மகிழுந்தில் மோதிய பாரஊர்தியின் ஓட்டுநரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பிரவீன் குமார் மகிழுந்து விபத்தில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 7 மணி நேரம் முன்