இந்திய மக்களவை தேர்தலில் மது குடிப்போர் சங்கம் போட்டி: முன்வைத்துள்ள கோரிக்கை
Tamil nadu
India
Election
By Sumithiran
இந்தியாவில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் மதுகுடிப்போர் சங்கம் போட்டியிடும் நிலையில், அந்த சங்கம் வித்தியாசமான கோரிக்கைகளை முன் வைத்துள்ளது.
இந்த தேர்தலில் பல்வேறு கட்சிகள் தமது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில் மது குடிப்போர் சங்கமும் தமது சார்பாக தேர்தல் அறிக்கையாக கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
வேட்புமனு தாக்கல்
ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் தமிழ்நாடு மதுகுடிப்போர் சங்கம் சார்பில் போட்டியிடுவதற்காக வேட்பாளர் எம்.எஸ்.ஆறுமுகம் தனது கழுத்தில் தாலி கயிறு அணிந்து வந்து வித்தியாசமான முறையில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அப்போது தங்கள் சங்கம் சார்பில், கடல் நீரில் மதுபானம் தயாரிக்க வேண்டும். அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் சின்டெக்ஸ் தாங்கியில் குடிநீர் வேண்டும். மதுப்பிரியர்களுக்கு இலக்கத் தகடு வேண்டும் என்று கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்