மத்திய அரசை கண்டித்து இராமேஸ்வரத்தில் வெடிக்கவுள்ள போராட்டம்
இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கையை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் போராட்டம் நடத்த இன்று நடத்திய அவசர கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.
இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த சனிக்கிழமை மீன் பிடிக்கச் சென்ற இரண்டு படங்களையும் அதிலிருந்த 21 கடற்றொழிலாளர்களையும் எல்லை மீன் தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்துள்ளனர்.
இதையடுத்து ராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்க பிரதிநிதிகள் மற்றும் கடற்றொழிலாளர்கள் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இன்று (18) அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
அவசர கூட்டத்தில் முடிவு
கூட்டத்தில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 21 மீனவர்களை உடனடியாக படகுடன் விடுதலை செய்ய வேண்டும்.
இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கையை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து வரும் 26 ஆம் திகதி இராமேஸ்வரம் மீன்பிடி, அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் இருந்து கடற்றொழிலாளர்கள் பேரணியாக வந்து கடலில் இறங்கி திருவோடு ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றி முடிவு செய்துள்ளனர்.
மீன்பிடி தடைக்காலம் அறிவிக்க இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் இலங்கை சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களை படகுடன் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் கைது நடவடிக்கை நடைபெறாமல் இரு நாட்டு அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கடற்றொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |