இலங்கையில் கைது செய்யப்படும் இந்தியர்கள்! வலுக்கும் கண்டனங்கள்
இலங்கை (Sri Lanka) கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் இதுவரையான காலப்பகுதிக்குள் சுமார் 182 இந்திய (India) கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை சிறிலங்கா கடற்படையினர் வெளியிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களிடமிருந்து 24 மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கடற்றொழில் நடவடிக்கை
வங்கக்கடலில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான இரண்டு மாத தடை கடந்த 15 ஆம் திகதி முடிவடைந்தது.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நேற்றைய தினம் (17) நான்கு இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் மாத்திரம் சுமார் 182 கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கண்டனம்
இதேவேளை, தமிழக கடற்றொழிலாளர்கள் சிறிலங்கா கடற்கடையினரால் கைது செய்யப்பட்டமை தொடர்பில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் (Anbumani Ramadoss) கண்டனம் வெளியிட்டுள்ளார்.
தமிழக கடற்றொழிலாளர்களுக்கு எதிரான சிங்களப் படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் இலங்கைக்கான பயணத்தின் போது, தமிழக கடற்றொழிலாளர்களுக்கான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |