வடக்கு கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்களை கண்காணிக்க புதிய திட்டம்
இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் அடிக்கடி சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபடுவதைக் கண்காணிப்பதற்காக “கடல் காவலர்கள்” எனப்படும் குடியியல் தன்னார்வப் படையை நிறுவுவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை கடற்றொழில் அமைச்சு சமர்ப்பித்துள்ளது.
வடமாகாண கடற்றொழிலாளர்களின் வலைகளை அழிப்பதற்காக இந்திய கடற்றொழிலாளர்கள் உள்நாட்டுக் கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதைத் தடுப்பதற்காக, அமைச்சரவையின் ஒப்புதலுக்கு இந்த பத்திரத்தை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் வருவதைத் தடுப்பதற்கான கடற்படையின் தற்போதைய முயற்சியை கண்காணித்து உதவுவதற்காகவே இந்த கடல் காவலர்கள் திட்டம் கொண்டு வரப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடமாகாண கடற்றொழிலாளர் சங்கங்கள் ஊடாக அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தன்னார்வப் படையில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய காலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |