இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கை விஜயம்
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி நாட்டை வந்தடைந்துள்ளார்.
அவரை விமான நிலையத்தில் வைத்து இன்று (5) புதன்கிழமை காலை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வரவேற்றுள்ளார்.
விக்ரம் மிஸ்ரி இன்றைய தினம் முழுவதும் அரச உயர்மட்டப் பிரதிநிதிகள் உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை முன்னெடுக்கவுள்ளார்.
உயர்மட்ட சந்திப்பு
இந்தப் பயணம், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நெருங்கிய இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய உயர்மட்ட சந்திப்புகளை அடிப்படையாகக் கொண்டு, முக்கிய ஒத்துழைப்புத் துறைகளையும் முன்னெடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தனது பயணத்தின் போது, இந்திய வெளியுறவுச் செயலாளர், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜய ஹெரத் உள்ளிட்ட மூத்த தலைவர்களைச் சந்திக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |