கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்ட 24 வயது இந்திய இளைஞர்!
கட்டுநாயக்கவில் 24 வயதான இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வியட்நாமில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சட்டவிரோதமான முறையில் போதைப்பொருளைக் கடத்தி வர முயன்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுங்க அதிகாரிகள் இன்று (27-10-2026) இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
சந்தைப் பெறுமதி
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்தச் சந்தைப் பெறுமதி சுமார் 51 மில்லியன் ரூபாய் (5.1 கோடி ரூபாய்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் தொலைபேசிகளை பழுதுபார்க்கும் தொழில் செய்து வரும் இச் சந்தேகநபர், வியட்நாமின் ஹோ சி மின் (Ho Chi Minh) நகரத்திலிருந்து வியட்நாம் எயர்லைன்ஸ் (Vietnam Airlines) சேவைக்குச் சொந்தமான VN-671 என்ற விமானம் மூலம் அதிகாலை 1.15 மணிக்கு இலங்கையை வந்தடைந்துள்ளார்.
மேலதிக விசாரணை
இந்தநிலையில், இவரது பயணப் பைகளை ஸ்கேன் செய்து பரிசோதித்த போது உடைகளுக்கு இடையே 7 பாக்கெட்டுகளில் நுட்பமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோகிராம் 100 கிராம் குஷ் ரக போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட 51 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் ஆகியன மேலதிக விசாரணைக்காகப் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலுள்ள காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் (PNB) ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |