பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா (Santosh Jha) இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவை (Harini Amarasuriya) சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
இன்று (02) இடம்பெற்ற இந்த சந்திப்பு குறித்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் சமூக ஊடக பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த பதிவில் இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்த உயர்ஸ்தானிகர், அவரது பதவிக்காலத்துக்காக நல்வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
இருதரப்பு உறவு
இலங்கை மக்களுக்கான இந்தியாவின் நிலையான அர்ப்பணிப்பு குறித்து இச்சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
In a congratulatory call on Hon. PM @Dr_HariniA, HC @santjha extended his best wishes for her tenure. Underscored India’s consistent commitment to the people of Sri Lanka. Exchanged views on accelerating progress in the multifaceted bilateral ties ????. pic.twitter.com/rRfNdMlwNn
— India in Sri Lanka (@IndiainSL) October 2, 2024
அத்துடன் பன்முக இருதரப்பு உறவுகளின் முன்னேற்றத்தை துரிதப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது
இதேவேளை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கொழும்பில் (Colombo) உள்ள பிரதமர் அலுவலகத்தில் இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா ஆகியோர் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
Remembering Bapu!
— India in Sri Lanka (@IndiainSL) October 2, 2024
Hon. Prime Minister of Sri Lanka @Dr_HariniA and HC @santjha paid tributes to Mahatma Gandhi at the Prime Minister’s Office in Colombo commemorating #GandhiJayanti.
Gandhiji’s timeless teachings remain ever relevant and continue to inspire us. pic.twitter.com/SRZYP41w3x
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |