சஜித்திற்கு விசேடமாக நன்றி தெரிவித்த இந்திய உயர் ஸ்தானிகர் : அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு
இந்திய சுதந்திர தினத்தில் வாழ்த்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு(sajith premadasa) இந்திய உயர் ஸ்தானிகர் விசேடமாக நன்றி தெரிவித்துள்ளமை தென்னிலங்கை அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை அரசியல்வாதிகள் தங்கள் எக்ஸ் கணக்குகள் மூலம் வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர். இதில் சிலருக்கு இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா(santosh jha) பதிலளித்திருந்தார்.
மேலும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச(namal rajapaksa) மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா(harsha de silva) ஆகியோருக்கு அவர் நன்றி தெரிவித்திருந்தார்.
சஜித்திற்கு விசேடமாக நன்றி
இவர்களுக்கு சாதாரணமாக வாழ்த்துத் தெரிவித்திருந்த சந்தோஷ் ஜா, எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாசவுக்கும் நன்றி தெரிவிப்பதோடு, “எமது இருதரப்பு உறவுகளை உங்களுடன் இணைந்து உயர் மட்டத்திற்கு கொண்டு வருவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்." என பதில் அளித்திருந்தார்.
Thank you @sajithpremadasa Our relations are poised for greater heights! https://t.co/os7HvyeHQJ
— Santosh Jha (@santjha) August 15, 2024
இந்த பதில் தொடர்பில் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் காரசாரமான விவாதம் இடம்பெற்று வருகின்றன.இந்த பதில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான குறியீடாக இருக்கலாம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சஜித் பிரேமதாசவை ஜனாதிபதிக்கும் முயற்சி
இந்தியா மறைமுகமாக சஜித் பிரேமதாசவை ஜனாதிபதிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் இந்தபின்புலத்திலேயே சந்தோஷ் ஜாவின் இந்தக் கருத்து பல்வேறு தரப்பாலும் அவதானிக்கப்பட்டு வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |