ஹட்டன் பகுதியில் தங்கிருந்த இந்தியப் பிரஜை கைது
Sri Lanka Police
Sri Lanka Magistrate Court
India
By Kiruththikan
ஹட்டன் பகுதியில் தங்கிருந்த இந்தியப் பிரஜை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
செல்லுபடியற்ற கடவுச் சீட்டு மற்றும் விசா அனுமதிப்பத்திரம் இன்றிய நிலையிலேயே குறித்த நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையில், ஹட்டன் காவல்துறையினரால் நேற்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
25 வயதான சந்தேகநபரை, ஹட்டன் நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்