கொழும்பை வந்தடைந்த இந்திய கடற்படை கப்பல்
இந்திய (India) கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் ஐஎன்எஸ் ஷல்கி (INS Shalki) உத்தியோகபூர்வ விஜயமாக கொழும்பு (Colombo) துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இன்று (02.08.2024) வருகை தந்த நீர்மூழ்கிக் கப்பலுக்கு சிறிலங்கா கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு ஏற்ப வரவேற்பளித்தனர்.
64.4 மீற்றர் நீளமுள்ள குறித்த நீர்மூழ்கிக் கப்பலானது 40 பணியாளர்களைக் கொண்டுள்ளது.
கடற்படை தலைமையகத்தில் சந்திப்பு
இதற்கிடையில், ஐஎன்எஸ் ஷல்கியின் கட்டளை அதிகாரி மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்கவை இன்று கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் சந்தித்தார்.
நீர்மூழ்கிக் கப்பல் கொழும்பில் தங்கியிருக்கும் போது, சிறிலங்கா கடற்படையினர் நீர்மூழ்கிக் கப்பலுக்குச் சென்று அதன் செயற்பாட்டு அம்சங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என குறிப்பிடப்படுகிறது.
மேலும், நீர்மூழ்கிக் கப்பலின் பணியாளர்கள் நாட்டில் உள்ள சில சுற்றுலாத் தலங்களுக்கு விஜயம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை உத்தியோகபூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு, குறித்த கப்பலானது ஓகஸ்ட் 04 ஆம் திகதி கொழும்பில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |