அதிகரித்த சீன தலையீடு இலங்கை விரைகிறார் இந்திய கடற்படைத்தளபதி
Sri Lanka
China
India
By Sumithiran
இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு நான்கு நாள் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இலங்கையில் சீனாவின் அதிகரித்துவரும் செயற்பாடுகள் குறித்த கவலைகளுக்கு மத்தியில் இலங்கை - இந்திய கடல் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் அவரின் இந்தப்பயணம் அமையவுள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீன உளவுக் கப்பல்
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீன உளவுக் கப்பல் ஒன்று நிறுத்தப்பட்டதை அடுத்து, புது டெல்லிக்கும் கொழும்புக்கும் இடையே இராஜதந்திர ரீதியிலான தகராறு ஏற்பட்டதை அடுத்து, சுமார் நான்கு மாதங்களுக்குப் பின்னர் இந்த விஜயம் வந்துள்ளது.
கடற்படை தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார், டிசம்பர் 13 முதல் 16 வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்