களவாடப்பட்டுள்ள டெல்லி அணியின் முக்கிய வீரர்களின் உடமைகள்...!
Delhi Capitals
TATA IPL
India
IPL 2023
By Pakirathan
இந்தியன் ப்ரீமியர் லீக் ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன, ஒவ்வொரு போட்டிகளும் இறுதிவரை சுவாரஸ்யத்தை ரசிகர்களுக்கு தருகின்றது.
இந்தநிலையில், ஐபிஎல் போட்டிகளை தாண்டிய பல சம்பவங்களும் இடம்பெற்றவண்ணம் உள்ளன.
அந்தவகையில், டெல்லி அணி வீரர்களின் விளையாட்டு உபகரணங்கள் திருடப்பட்டுள்ளதாக தகவலொன்று வெளியாகியுள்ளது.
திருட்டு
டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் மற்றும் யாஷ் துல் ஆகியோர் பயன்படுத்தும் 16 துடுப்பு மட்டைகள் உட்பட சில கையுறைகள், சப்பாத்துகள், பேடுகள் ஆகியவையும் திருடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
குறித்த திருட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை டெல்லி அணியின் நிர்வாகம் ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகின்றது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி