அமெரிக்காவில் சுட்டுகொல்லப்பட்ட இந்தியர்
அமெரிக்காவில் (United States) இந்தியர் ஒருவர் சுட்டுகொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய (India) வம்சாவளியைச் சேர்ந்த ராகேஷ் ஏகபன் எனும் 51 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு சுட்டுகொல்லப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் 37 வயதுடைய ஸ்டான்லி யூஜின் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உணவு விடுதி
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த குறித்த நபர், அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் உணவு விடுதியொன்றை நடத்தி வந்துள்ளார்.
இந்த விடுதியின் முன்பு இருவர் மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில், அதனை விலக்கிவிட அவர் முயற்சித்துள்ளார்.
இதன்போது, மோதலில் ஈடுபட்ட ஒருவரால் அவர் சுட்டுகொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியர்கள்
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்திய நபரை சுட்டுபிடித்துள்ளனர்.
குறித்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கேமராக்களில் பதிவாகி இருந்த நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், அமெரிக்காவில் தொடர்ந்து இந்தியர்கள் கொல்லப்பட்டு வரும் சம்பவம் பெரிதும் சர்ச்சைக்குள்ளாகி உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
