ஓய்வை அறிவித்தார் இந்திய சுழற்பந்து ஜாம்பவான்
Indian Cricket Team
By Sumithiran
இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா(Amit Mishra) தொழில்முறை கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
42 வயதான மிஸ்ரா, 22 டெஸ்ட், 36 ஒருநாள் மற்றும் 10 ரி20 போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார், 156 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்
கடைசியாக 2017 இல் இந்திய அணியை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தாலும், மிஸ்ரா 2024 வரை ஐபிஎல்லில் தொடர்ந்து விளையாடினார்.
2008 இல் சர்வதேச அளவில் அறிமுகமான அவர் அதே ஆண்டில் ஐபிஎல் இலும் அறிமுகமானார்.அதே வருடத்தில் பட்டத்தையும் வென்ற மிஸ்ரா, 162 ஐபிஎல் போட்டிகளில் 174 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் 8வது இடத்தைப் பிடித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி