அமெரிக்காவில் அதிகரிக்கும் இந்திய மாணவர் மரணங்கள்!
அமெரிக்காவின் ஒகியோவின் கிளீவ்லேண்ட் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்த இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உமா சத்யசாய் கத்தே என்ற மாணவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தகவலை நிவ்யோர்க்கில் உள்ள இந்திய தூதரகம், உறுதி செய்துள்ளது.
மேலும் குறித்த மரணம் இந்த ஆண்டில் அமெரிக்காவில் இடம்பெற்ற 10-வது சம்பவம் என குறிப்பிடப்படுகிறது.
காவல்துறையினர் விசாரணை
இது தொடர்பில் நியூயார்க்கில் உள்ள இந்திய துணை தூதரகம் எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்திய மாணவர் உமா சத்யசாய் காடேவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வர, அனைத்து உதவிகளும் குடும்பத்திற்கு செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்திய மாணவரின் மரணத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அமெரிக்க காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |