அமெரிக்காவில் காணாமற்போன இந்திய மாணவர் : தீவிர தேடுதலில் காவல்துறை
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கல்வி கற்று வந்த இந்திய மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கர்நாடகாவைச் சேர்ந்த சாகேத் ஸ்ரீனிவாசய்யா (22 வயது) என்ற மாணவரே காணாமற்போனவராவார்.
கலிபோர்னியா பல்கலையில் முதுகலை கல்வி
கலிபோர்னியாவின் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முதுகலை படித்து வந்த இவர் கடந்த செவ்வாய்க்கிழமை காணாமல் போனதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவரது கடவுச்சீட்டு மற்றும் மடிக்கணனி இருந்த பை, பார்க் ஹில்ஸ் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடைசியாக டுவைட் வேயின் 1700 பிளாக்கில் சாகேத் ஸ்ரீனிவாசய்யா காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையின் அறிவிப்பு
இந்திய மாணவர் காணாமல் போயுள்ளது குறித்து, சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது

சாகேத் ஸ்ரீனிவாசய்யா குறித்து தகவல் தெரிந்தவர்கள் உள்ளூர் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |